காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடிகர் சங்கம் சார்பில் நடந்த மவுன போராட்டத்தில் 4 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் சத்யராஜ் பேச வேண்டும் என கோரிக்கை வைக்க, ’வாரியம் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். இது மவுன போராட்டம். நான்மட்டும் பேசினால் சரியாக இருக்காது’ என முடித்துக்கொண்டார்.