ஆசியக் கோப்பை தொடர் வரும் செப்டம்பரில் இந்தியாவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஆசியக் கோப்பை தொடரை இந்தியாவில் நடத்துவதற்குப் பதிலாக வேறு ஒரு நாட்டில் நடத்துமாறு ஆசியக் கிரிக்கெட் கவுன்சிலை வலியுறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. மறுத்தால் பாகிஸ்தான் தொடரைப்  புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாம்.