சர்ச்சைக்கு பேர் போன இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்கத்தில், டோலிவுட்டின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நாகர்ஜுனா நடிக்க உருவாகியுள்ள 'ஆஃபிஸர்' படத்தின் டீசரை இன்று வெளியாகியுள்ளது. மும்பை அண்டர் கிரவுண்டு கேங்ஸ்டர் விஷயங்களில் ஈடுப்பட்டிருக்கும் குற்றவாளிகளை பிடிக்கும் இன்வெஸ்டிகேஷன் ஆஃபிஸராக நாகர்ஜுனா வருகிறார்.