'தல்வார்' படத்தை இயக்கிய இயக்குநர் மேக்னா குல்ஸார் இயக்கத்தில், காஷ்மீர் பெண்ணாக ஆலியா பட் நடிக்கும் படம்  'ராஸீ'. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. ஆலியாவுக்கு  ஜோடியாக, பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் விக்கி கௌஷல் நடிக்கிறார்.  மே 11-ம் தேதி, இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்படுகிறது.