தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. சுவாமி சண்முகருக்கு சிறப்பு அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. திருக்கோயில் கலையரங்கில் சமயச் சொற்பொழிவும், கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.