ராணுவ கண்காட்சியில் பங்கேற்கத் தமிழகம் வந்துள்ளார் பிரதமர் மோடி. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்தும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ட்விட்டரில் # GoBackModi என்ற ஹேஷ்டேக்கின் கீழ் நெட்டிசன்ஸ் பதிவிட்டு வருகின்றனர். இந்த ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.