சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வரும் 30-ம் தேதி நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதிகாலை 5.45 முதல் 6.15 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.