பிரதமர் மோடியின் தமிழகம் வருகைக்கு எதிராகத் தி.மு.க உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இந்தநிலையில், கறுப்பு உடையணிந்த 9 மாதக் குழந்தை, கையில் கறுப்புக் கொடி வைத்திருப்பது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.