65 வது தேசிய திரைப்பட விருதுகள் - சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான தேசிய விருது `டூலெட்’ படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கியுள்ளார். சென்னையில் 30 நாள்களில் வாடகைக்கு புது வீடு தேட வேண்டிய கட்டாயத்திலுள்ள குடும்பத்தைப் பற்றிய கதைதான் டூ லெட்.