காமன்வெல்த் போட்டிகளில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது. இந்நிலையில் இன்று ஆஃப்ரிக்காவின் உகாண்டா நாட்டு வீரர் செப்டேகி 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதற்கு முன்னர் நடைபெற்ற 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்திலும் செப்டேகி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.