அஷ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் உள்ளூர் மண்ணில் பெங்களூரு அணியின் முதல் போட்டி இதுவாகும். இந்தத் தொடரில் டாஸ் வெல்லும் கேப்டன்கள் ஃபீல்டிங் மட்டுமே தேர்வு செய்துள்ளனர்.