டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 53 ரன்களும் எல்வின் லூயிஸ் 48 ரன்களும் எடுத்துள்ளனர். ட்ரெண்ட் பௌல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இரு அணிகளும் இதுவரையில் ஒரு போட்டியில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.