ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக கிறிஸ் லின் 49 ரன்கள் எடுத்தார். புவனேஷ்வர் குமார் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து 139 ரன்கள் இலக்குடன் சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி களமிறங்கவுள்ளது.