தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ராமநாதபுரம் அருள்மிகு வெட்டுடையார் காளியம்மனுக்கு பழங்களில்  அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கப்பட்டது. மேளதாளங்களுடன் அம்மனுக்கு பூக்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல் ராமநாதபுரத்தில் பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றன.