மதுரையில் பிரசித்தி பெற்ற அருள்மிகு கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா கொட்டகை முகூர்த்தம் இன்று தொடங்கியது.  காலை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் ஆயிரம் பொன் சப்பரம் யாழி முகத்திற்குச் சிறப்பு பூஜையும், முகூர்த்தக் கால் நடும் நிகழ்வும் நடைபெற்றது.