சத்தீஸ்கரின், பீஜப்பூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்றில் பிரதமர் மோடி, மலைவாழ் பெண் ஒருவருக்கு காலணி போட்டுவிடும் வீடியோ வைரலாகி வருகிறது. ராத்னிபாய் என்ற மூதாட்டி மோடியிடம் காலணி வாங்குவதற்காக மேடையேறி வந்தார். காலணியை கையி்ல் வைத்திருந்த மோடி காலணியை மூதாட்டி காலில் அணிவித்தார்.