மொகாலியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி முதலில் பந்து வீச முடிவு செய்தார். முதலில் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்  20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. கிறிஸ் கெய்ல் அதிகபட்சமாக 63 ரன்கள் எடுத்தார். தாஹிர் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.