மொகாலியில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி இந்த ஐ.பி.எல் தொடரில் முதல் தோல்வியை பதிவு செய்தது. முதலில் ஆடிய பஞ்சாப்  20 ஓவர்கள் முடிவில் 197 ரன்கள் எடுத்தது. அடுத்துக் களமிறங்கிய சென்னை 193 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக கேப்டன் தோனி 44 பந்துகளில் 79 ரன்கள் எடுத்தார்.