திரைத்துறையில் விஜயகாந்த் கால்பதித்து 40 ஆண்டுகள் ஆனதையொட்டி தே.மு.தி.க சார்பில் விழா எடுக்கப்பட்டது. இதில் சண்முக பாண்டியன் பேசிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. ’அப்பாவோட கண்கள் எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கும் அந்த கண்கள் ரொம்ப பிடிக்கும். அந்த கண்களை எனது கையில் டாட்டுவாக வரைந்திருக்கிறேன்’ என டாட்டுவை காட்டினார்.