காமன்வெல்த் போட்டியில் மல்யுத்தத்தில் பங்கேற்ற அனைத்து இந்திய வீரர், வீராங்கனைகளும் தலா ஒரு பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்த முறை பல்வேறு எடை பிரிவில் 12 இந்திய வீரர், வீராங்கனைகள் மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் தலா ஒரு பதக்கம் வென்றனர். இதில் 5 தங்கப்பதக்கமும் அடங்கும்.