அம்பத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ரவிச்சந்திரன் அலுவலகத்தில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். காவல்நிலையம் அருகிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இதில் பாதிப்பில்லை. போலீஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.