தேனி அருகே ஜங்கால்பட்டியில் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமான காற்றாலையில் இன்று மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டது. பணியில் இருந்த ஊழியர்கள் புகையில் சிக்கினர். தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். அதில் ஒருவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்