ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 129 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கொல்கத்தா சார்பில்  நரைன் மற்றும் குல்தீப் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.