இந்திய அரசியலமைப்பை மத்திய அரசே மதிக்காமல் நதி நீரை வைத்து அரசியல் செய்வதை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ, ஹைட்ரோகார்பன், மீத்தேன் திட்டம் ஆகியவற்றிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நேற்று தமிழ்செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.