இருளப்பன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 'நான் எஸ்.எஸ்.எல்.சி, ஐ.டி.ஐ படித்து இளங்கலை முடித்து சட்டம் பயின்றேன். என்னுடைய பதிவை தமிழ்நாடு பார் கவுன்சில் ஏற்க மறுக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கில், பார் கவுன்சில் செயலாளர்கள் விளக்கம் அளிக்க' உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.