சென்னை அருகே கேளம்பாக்கத்தில் 6ம் வகுப்பு மாணவருக்குச் சூடு வைத்த விடுதி காப்பாளர் ராட்சகதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். சகமாணவரின் செல்போன் திருட்டு புகாரில் மாணவரைப் பிரம்பால் அடித்த ராட்சகதாஸ், உணவு தராமல் துன்புறுத்தி, சூடு வைத்துள்ளார். மாணவரின் தாயார் அளித்த புகாரின் பேரில் ராட்சகதாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.