மான் வேட்டையாடிய வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது ஜோத்பூர் கிளை நீதிமன்றம். இதைத் தொடர்ந்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் நடிகர் சல்மான்கான் வெளிநாடு செல்வதற்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். தற்போது அவருக்கு ஜோத்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.