மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் இன்று 11.71 புள்ளிகள் அதாவது 0.03 சதவிகிதம் குறைந்து 34,415.58 என முடிந்தது. தேசிய பங்குச்சந்தையின் நிஃப்ட்டி 1.25 புள்ளிகள், அதாவது 0.01 சதவிகிதம் குறைந்து 10,564.05-ல் முடிவுற்றது. வங்கி, ரியல் எஸ்டேட், ஆயில் மற்றும் மெட்டல் துறை பங்குகள் இன்று பெரும்பாலும் நஷ்டத்தில் முடிந்தன.