நடிகர் விஜய் ஜூன் 22 ஆம் தேதி மதுரையில்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று மதுரை முழுவதும் போஸ்டர் அடிக்கப்பட்டிருந்தது. இது மதுரை முழுவதும பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அனைத்து தரப்பினரும் விசாரிக்கத் தொடங்கினர். இதுகுறித்து விசாரித்தபோது, விஜய் பிறந்தநாளுக்காக அடிக்கப்பட்ட பேனர் என்று தெரியவந்தது.