சீனா நாட்டுக்குப் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சீனாவின் உகான் நகரில் பிரதமர் மோடி சீன அதிபர் ஸி ஜின் பிங்கை சந்தித்துப் பேசினார். எல்லை பிரச்னை உள்ளிட்ட பல சிக்கல் இருக்கும் நிலையில், இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.