வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த இயந்திர உலகில் பெரும்பாலானோர் பொருளீட்டவே நம் நேரத்தைச் செலவழித்து வருகிறோம். குடும்பத்துக்கென்று எவ்வளவு நேரத்தை ஒதுக்குகிறோம்? குடும்பத்துடன் அமர்ந்து ஒருவேளையாவது சாப்பிடுகிறோமா? குடும்பம், நண்பர்கள், செல்லப் பிராணிகள் .. இவர்களுடன் செலவிடும் நேரம்தான் உண்மையான மகிழ்ச்சியைக் கொடுக்கும்!