பெரு நாட்டில் வட பகுதியில் அமைந்துள்ள கடலோர பிரதேசத்தில் 550 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரே சமயத்தில் 140 குழந்தைகளுக்கு மேலாக நரபலி கொடுக்கப்பட்டுள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. அந்நாட்டின் தேசிய புவியியல் நிறுவனத்தின் நிதி ஆதரவோடு நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.