இந்திய பிரதமர் மோடி தற்போது சீன நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. இன்று சீனாவில் உள்ள வுஹான் கிழக்கு ஏரிக்கரையில் மோடியும் சீன அதிபரும் பேசிக்கொண்டே நடைப்பயணம் மேற்கொண்டனர். பின்னர் இருவரும் படகு இல்லத்திலும் இருநாட்டு உறவு குறித்து விவாதம் செய்துகொண்டே பயணம் மேற்கொண்டனர்.