பெரு நாட்டின் கடலோர பிரதேசத்தில், 5-14 வயது மதிக்கத்தக்க 140 குழந்தைகளின் எலும்புகளும் 200 இளம் ஒட்டகங்களின் எலும்புகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை ஆய்வு செய்ததில் 550 ஆண்டுகளுக்கு முன், ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள், ஒட்டகங்கள் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.