மதுரை மக்களின் கொண்டாட்டமான சித்திரைத்திருவிழாவின் 11-ம் நாளான நேற்று, விழா நாயகனான கள்ளழகர், அழகர் மலையிலிருந்து இறங்கி மதுரையை நோக்கி கிளம்பினார். ஐநூறு மண்டகப்படிகளில் வரவேற்ப்பை ஏற்று மதுரை வரும் கள்ளழகர் தல்லாகுளம் பெருமாள் கோயிலில் தங்குகிறார். 30-ம் தேதி காலை வைகையில் இறங்குகிறார்.