வைகை ஆற்றில் இறங்கக் கள்ளழகர் மலையிலிருந்து புறப்பட்டு பல மண்டகப்படிகளில் எழுந்தருளி மதுரைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், அவருக்குச் சூடுவதற்காக ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையும் மதுரையை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. கள்ளழகருக்குச் சாத்தப்படவுள்ள மாலை,கிளி, ஆடைகள் ஆண்டாளுக்குச் சாத்தப்பட்டன.