சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 3 வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். அவற்றில், ஒரு வீடியோவில் அவரின் மகள் ஸிவா பாடல் ஒன்றுக்கு நடனமாடுகிறார். மற்ற இரண்டு வீடியோக்களில் ஸிவா, சென்னை அணிக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். தற்போது, இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.