மதுரை வைகை ஆற்றுக்குள் நள்ளிரவு முதல் கடல்போல் திரண்டிருந்த மக்களுக்கு மத்தியில், எதிர் சேவைகளுக்குப் பிறகு, காலை 6 மணி அள‌வில்‌ வைகை ஆற்றுக்கு வருகை‌ புரிந்த சுந்தர்ராஜ பெருமாளான கள்ளழகர், பச்சைப் பட்டுடுத்தி‌ ஆற்றில் இறங்கினார். அப்போது அங்கு திரண்டிருந்த மக்கள் உற்சாகத்துடன் தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர்.