பூம்புகார் சிலப்பதிகார காப்பியத்துடன் தொடர்புடையது. சங்க காலம் முதல் சித்ரா பௌர்ணமி தினத்தில் கொண்டாடப்பட்ட இந்திர விழா கடந்த 8 வருடங்களாகக் கொண்டாடப்படவில்லை. அதே போல இவ்வாண்டும் இந்திர விழவுக்காகப் பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று கடற்கரைக்கு வந்த மக்கள் அதிருப்தி அடைந்தனர்.