ஆண்டுதோறும் சித்திரைப் பெளர்ணமி நாளில் கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதே போன்று அருள்மிகு சுந்தரராஜ பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் பரமக்குடி வைகை ஆற்றில் இறங்கிய விழா விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு அழகரை வரவேற்றனர்.