வைகையாற்றில் பச்சைப்பட்டுடுத்தி ஆடம்பரமாக இறங்கிய கள்ளழகர், 12 மணி முதல் ராமராயர் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, இன்று இரவு 11 மணிக்கு வண்டியூர் வீரராகவப்பெருமாள் கோயிலுக்கு செல்கிறார். அதன்பின்னர், நாளை காலை 11 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்பட்டு தேனூர் மண்டபம் செல்கிறார்.