இந்தக் கோடைக்காலத்தில் அதிகம் பாதிக்கப்படுவது நம் சருமம்தான். கற்றாழை, சந்தனம் உள்ளிட்டவற்றைச் சருமத்தில் பூசலாம். தர்பூசணி, வெள்ளரி, இளநீர், மோர் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். நீரில் சீரகத்தைப் போட்டுக் காய்ச்சிப் பருகலாம். இதனால் உடல் குளிர்ந்து சருமம் புத்துணர்ச்சியடையும்!