மதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் இன்று இரவு விடிய விடிய நடைபெறும் தசாவதார நிகழ்ச்சியில் கள்ளழகர் எழுந்தருள்கிறார். அதைக்காண மக்கள் மதுரையில் குவிந்து கொண்டிருக்கிறார்கள். அழகர் மலைக்குத் திரும்பிச் செல்கிற  3-ம் தேதி வரை மதுரையில் தொடர்ச்சியான நிகழ்ச்சிகளில் கள்ளழகர் எழுந்தருள்கிறார்.