இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லா, விண்வெளி ஆராய்ச்சிக்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். விண்வெளித் துறைக்கு எண்ணற்ற பணிகளை ஆற்றியுள்ள அவர், அமெரிக்காவின் ஹீரோ. லட்சக்கணக்கான அமெரிக்க பெண்களுக்கு, சாவ்லா முன்னுதாரணமாகத் திகழ்கிறார் என டொனால்டு ட்ரம்ப் பேசியுள்ளார்.