ஈரோடு மாவட்டம் அரச்சலூரில் உள்ள அரச்சாலம்மன் கோயிலில் அம்மனுக்கு தீர்த்தம் எடுத்து வந்து பூக்குழி இறங்கி பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். விடுமுறை நாள் என்பதால் அதிக மக்கள் கூட்டம் அரச்சலூரில் காணப்பட்டது. பூக்கள் மற்றும் மாலைகள் வியாபாரம் அமோகமாக நடந்தது.