திருச்சி அன்பாலய காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய பாபு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் காப்பகத்தில் பாதுகாப்பில் இருந்து வந்துள்ளார். இவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். மாநில குற்ற ஆவண காப்பகம் மூலம் இவரது முகவரி கண்டுபிடிக்கப்பட்டு 21 ஆண்டுகளுக்குப் பின் அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார்.