சமூக வலைதளமான  ட்விட்டர், தனது 336 மில்லியன் பயனீட்டாளர்களையும் பாஸ்வேர்டை மாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளது. ட்விட்டர் இணையத்தில் ஏற்பட்ட சிறு பிரச்னை காரணமாகவும், கூடுதல் பாதுகாப்புக்காகவும் பாஸ்வேர்டை மாற்றும்படி கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், எந்தத் தகவல்களும் கசியவில்லை எனவும் தெரிவித்துள்ளது ட்விட்டர்.