காஞ்சிபுரம் அருகே இருந்த நடிகர் சங்கத்துக்கு சொந்தமான நிலத்தை முறைகேடாக விற்று, அந்தத் தொகையைக் கையாடல் செய்ததாக சரத்குமார், ராதாரவிக்கு எதிராக நடிகர் சங்கத் தலைவர் நாசர் நில அபகரிப்பு பிரிவு காஞ்சிபுரம் டிஎஸ்பியிடம் புகார் அளித்துள்ளார். ஐகோர்ட் அளித்த உத்தரவை தொடர்ந்து அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.