ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். வேலைக்காரன் படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் - நயன்தாரா ஜோடி சேரும் இரண்டாவது படம் இது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.