திருச்செந்தூரில் பிரசித்தி பெற்ற அருள்மிகு முத்தாரம்மன் கோயில் சித்திரை கொடை உற்சவ விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் பல்வேறு  வேடமணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  கோயில் கொடைவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரே விழாக்கோலம் பூண்டுள்ளது.